தேசியம்
செய்திகள்

தொடர்ந்து பதிவாகும் Omicron திரிபு!

Omicron திரிபின் தொற்றுக்கள் கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் தொடர்ந்தும் பதிவாகின்றன.
Omicron திரிபின் முதலாவது தொற்றை Saskatchewan புதன்கிழமை (08) அறிவித்தது.

ஒரு வீட்டைச் சேர்ந்த நான்கு பேர் இந்த திரிபால் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

கனடா அரசாங்கத்தால் அண்மையில் பயண தடை விதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றிற்கு இந்த குடும்பம் பயணம் செய்ததாக தெரியவருகின்றது

இந்த நபர்கள் அவர்களின் நெருங்கிய தொடர்புகள் அடையாளம் காணப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் சமூக பரவல் அபாயம் குறைவாக இருப்பதை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

தொடர்ந்து Omicron தொற்றுக்களை எதிர்பார்க்கப்பதாகவும், தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளை குடியிருப்பாளர்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் எனவும் அமைச்சகம் கூறியது.

இதேவேளை Omicron  திரிபின் நான்கு புதிய தொற்றுகளை Manitoba புதன்கிழமை அறிவித்தது.

Manitoba தனது முதல் Omicron திரிபை அறிவித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த அறிவித்தல் வெளியானது.

கனடா அரசாங்கத்தால் அண்மையில் பயண தடை விதிக்கப்பட்ட நாடுகள் ஒன்றிற்கு இவர்களில் ஒருவர்  சமீபத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

ஏனைய தொற்றுகள் இவருடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Ontarioவிலும் புதன்கிழமை Omicron திரிபின் தொற்றாளர் ஒருவர்  அடையாளம் காணப்பட்டார்.

கிழக்கு Ontarioவில் உள்ள ஒரு பொது சுகாதாரப் பிரிவு, பயண வரலாறு இல்லாத ஒருவரில் Omicron திரிபைக் கண்டறிந்ததாக கூறுகிறது.

அந்த நபர் எவ்வாறு திரிபால் பாதிக்கப்பட்டார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக பொது சுகாதாரம் மையம் கூறுகிறது.

கனடாவின் முதலாவது Omicron திரிவு கடந்த மாதம் 28ஆம் திகதி Ontarioவில் உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவரை குறைந்தது 31 பேர் இந்த திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை காலை Ontario மாகாண சுகாதார அதிகாரிகள் கூறினர்.

Related posts

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கனடாவில் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

பெண் ஒருவரை பாலியல் வர்த்தகத்தில் நிர்பந்தித்த தமிழர் கைது

Lankathas Pathmanathan

கனடிய அரசின் சிறந்த பணியாளர்கள் பிரிவுகளில் முதலிடத்தை பெற்ற தமிழர்

Gaya Raja

Leave a Comment