கனடாவில் புதன்கிழமை (08) மாத்திரம் 3,532 COVID தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன.
புதன்கிழமை மீண்டும் Ontarioவிலும் Quebecகிலும் தலா ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின.
Quebecகில் 1,367 தொற்றுகளும் இரண்டு மரணங்களும் பதிவாகின.
Ontario சுகாதார அதிகாரிகள் 1,009 தொற்றுகளையும் எட்டு மரணங்களையும் அறிவித்தனர்.
கடந்த 6 மாதங்களில் புதிய தொற்றுகளின் அதிகபட்ச 7 நாள் சராசரி புதன்கிழமை Ontarioவில் பதிவானது.
Albertaவில் 388 தொற்றுகளும் நான்கு மரணங்களும் அறிவிக்கப்பட்டன.
British Columbiaவில் 379 தொற்றுகளும் ஆறு மரணங்களும் பதிவாகின.
Manitobaவில் 178 தொற்றுகளும் மூன்று மரணங்களும் பதிவாகின.
New Brunswickகில் 111 தொற்றுகள் இன்று பதிவு செய்யப்பட்டன.
தவிரவும் ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் இன்று தலா 100க்கும் குறைவான தொற்றுகளை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
கனடாவில் தொடரின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை அண்மிப்பது குறிப்பிடத்தக்கது.