Ontarioவில் தொடர்ந்து Omicron திரிபின் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
வெள்ளிக்கிழமை மூன்று Toronto குடியிருப்பாளர்கள் Omicron தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். Toronto நகரில் அடையாளம் காணப்பட்ட இந்த புதிய திரிபின் முதல் மூன்று தொற்றாளர்களும் இவர்களாவார். Torontoவில் ஒரு உணவக ஊழியர் Omicron திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரப் பிரிவு சந்தேகம் வெளியிட்டது.
York பிராந்தியத்திலும் ஒரு Omicron திரிபு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டார். 12 வயதிற்கு குறைந்த ஒரு இளம் குழந்தை சமீபத்திய பயணத்திற்குப் பின்னர் Omicron திரிபினால் பாதிக்கப்பட்டதாக York பிராந்தியத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி கூறினார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு குடும்பத்தினருடன் பயணம் செய்த, தடுப்பூசி போட முடியாத இளம் வயது குழந்தை Omicron திரிபினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டார்.
Durham பிராந்தியமும் வெள்ளிக்கிழமை தொடர்ந்தும் இரண்டாவது நாளாகவும் ஒரு Omicron திரிபை பதிவு செய்தது.