February 23, 2025
தேசியம்
செய்திகள்

Ontarioவில் மீண்டும் ஒரு Omicron திரிபு

Ontarioவில் மீண்டும் ஒரு Omicron திரிபு வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது

தென்னாப்பிரிக்க நாட்டிலிருந்து திரும்பிய ஒரு பயணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒரு குடியிருப்பாளரின் Omicron திரிபை Durham பொது சுகாதாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது Ontarioவில் பதிவான ஐந்தாவது Omicron திரிபாகும்.

Ottawaவில் ஏற்கனவே நான்கு Omicron திரிபுகள் உறுதிப்படுத்தியுள்ளது.

தவிரவும் Hamiltonனில் மேலும் இரண்டு சாத்தியமான தொற்றுக்களை விசாரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் Omicron திரிபின் ஆபத்துள்ள நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்த 375 பேரை அவதானித்து வருவதாகவும் Ontario சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இந்த திரிபின் மேலும் பல திரிபுகள் விரைவில் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக Ontarioவின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் Kieran Moore செய்தியாளர்களிடம் கூறினார்.

Related posts

ஒரு மாதத்தில் அதிக தொற்றுக்களை Ontario பதிவு செய்தது!

Gaya Raja

முடிவுக்கு வந்த Royal வங்கியின் தொழில்நுட்ப சவால்

Lankathas Pathmanathan

COVID தொற்றின் எண்ணிக்கை Ontarioவில் மீண்டும் அதிகரிக்கும்!

Lankathas Pathmanathan

Leave a Comment