Omicron திரிபு காரணமாக கனடா மேலும் பல நாடுகளை உள்ளடக்கிய பயணத் தடையை செவ்வாய்க்கிழமை (30) விரிவுபடுத்தியது.
Omicron திரிபு குறித்த அச்சம் காரணமாக, மத்திய அரசின் பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, மலாவி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை கனடா இணைக்கின்றது.
இந்த மூன்று நாடுகளும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பயணங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த ஏனைய ஏழு ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைகின்றன.
கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளுக்கு பயணம் செய்த அனைத்து வெளிநாட்டவர்களும் கனடாவுக்குள் நுழைவது தடை செய்யப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் Omicron திரிபு காரணமாக உருவாகி வரும் சூழ்நிலை குறித்து மத்திய அமைச்சரவை விவாதித்தது.
இதுவரை இந்த திரிபு காரணமாக ஏழு உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்கள் கனடாவில் அடையாளம் காணப்பபட்டுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் மேலும் தொற்றளர்கள் கண்டறியப்படலாம் என பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.