December 12, 2024
தேசியம்
செய்திகள்

Newfoundland மாகாணத்திற்கு இராணுவ உதவி: பிரதமர்

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட Newfoundland மாகாணத்தின் இராணுவ உதவிக்கான கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

மாகாணத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ள தென்மேற்கு Newfoundlandடிற்கான இராணுவ உதவிக்கான கோரிக்கைக்கு பிரதமர் Justin Trudeau ஒப்புதல் அளித்துள்ளார்.

கனேடிய ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் உதவிகளை வழங்குவதற்காக அப்பகுதிக்கு அனுப்பப்படுவார்கள் என இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் பிரதமர் கூறினார்.

வெளியேற்றத்திற்கும் விநியோகதிற்கும் உதவ இராணுவம் விமான ஆதரவை வழங்கும் என அவசரகாலத் தயார்நிலை அமைச்சர் Bill Blair தெரிவித்தார்.

Related posts

Omicron பரவலை கட்டுப்படுத்த Ontario உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை

Quebec இல் 3 நகரங்கள் சிறப்பு கட்டுப்பாட்டுக்குள் – 4 பிராந்தியங்கள் சிவப்பு மண்டலத்திற்குள்!

Gaya Raja

Leave a Comment