தேசியம்
செய்திகள்

குறுகிய வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பின்னர் COVID சோதனைகள் தேவையில்லை!

குறுகிய நாட்களுக்கான வெளிநாட்டுப் பயணங்களுக்கான மூலக்கூறு COVID சோதனைத் தேவையை கனடா கைவிடுகிறது.

72 மணி நேரத்திற்கும் குறைவான பயணத்தின் பின்னர் கனடாவுக்குத் திரும்பும் போது முழுமையான COVID தடுப்பூசியை பெற்ற பயணிகளுக்கான மூலக்கூறு சோதனைத் தேவையை நீக்குவதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

November 30 முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனடிய குடிமக்களும் நிரந்தர குடியிருப்பாளர்களும்  அமெரிக்காவிற்கும் வெளிநாடுகளுக்கும் குறுகிய பயணங்களுக்குப் பின்னர் PCR சோதனை போன்ற எதிர்மறை மூலக்கூறு சோதனைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 72 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் வெளிநாட்டு பயணங்களுக்கு மூலக்கூறு சோதனை தேவை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இது தொற்று குறித்த அரசாங்கத்தின் அணுகுமுறையின் அடுத்த கட்டத்தைப் பிரதிபலிக்கிறது என வெள்ளிக்கிழமை வெளியான அறிவித்தலின் போது சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos கூறினார்.
பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய போதிலும், கனடியர்கள் COVID பரவல் விடயத்தில் தங்கள் பாதுகாப்பைக் குறைக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
பயணிகள் தொடர்ந்தும் ArriveCAN செயலியில் தங்கள் பயணத் தகவலை பகிர வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino தெரிவித்தார்.

Related posts

கனடிய வெளியுறவு அமைச்சர் Marc Garneauவின் வெளிநாட்டு பயணங்கள் நியாயமானது ;பிரதமர்

Gaya Raja

கனடா இந்த வாரம் 20 இலட்சம் தடுப்பூசிகளை பெறுகிறது!

Gaya Raja

தீவிரமடையும் பொதுச் சேவை கூட்டணி சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment