தேசியம்
செய்திகள்

குழந்தைகளுக்கான Modernaவின் COVID தடுப்பூசி – மதிப்பாய்வு செய்யும் Health கனடா

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியை அங்கீகரிக்குமாறு Health கனடாவிடம் Moderna கோரியுள்ளது.

6 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான Spikevax COVID தடுப்பூசியை அங்கீகரிப்பதற்காக Modernaவின் கோரிக்கையை Health கனடா பெற்றுள்ளது.

5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசியின் தற்போதைய மதிப்பாய்வுடன், இன்று சமர்ப்பிக்கப்பட்ட Modernaவின் மதிப்பாய்வுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக Health கனடா கூறுகின்றது.

அனைத்து COVID தடுப்பூசிகளைப் போலவே, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றிற்கான அதன் உயர் அறிவியல் தரத்தை பராமரிக்கும் அதே வேளையில், இந்த தடுப்பூசியின் மதிப்பாய்வுக்கு முன்னுரிமை அளிக்கும் என Health கனடா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வயதினருக்கு ஏற்படும் அபாயங்களை விட நன்மைகள் அதிகமாக இருப்பதாக தரவை மதிப்பாய்வு செய்தால் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசியை பயன்படுத்த அங்கீகரிக்கப்படும் எனவும்  Health கனடா கூறுகிறது.

Related posts

Ontario அரசாங்கத்திற்கும் கல்வி தொழிற்சங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள்

Lankathas Pathmanathan

Justin Trudeau பதவி விலக வேண்டும்: அதிகரிக்கும் அழைப்பு

Lankathas Pathmanathan

Ontario குடியிருப்பு பாடசாலையில் 171 சாத்தியமான மனித எச்சங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment