December 12, 2024
தேசியம்
செய்திகள்

British Columbiaவில் பேரழிவுகரமான வெள்ளம்!

கனடாவின் மேற்கு கடலோரத்தை தாக்கும் ஒரு தீவிர புயல் British Columbiaவில் தொடந்தும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை முதல் British Columbia மாகாணம் பேரழிவுகரமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு மழை, வெள்ளம், மண்சரிவுகள், பாறைகள் சரிவுகள் என்பன நெடுஞ்சாலை மூடல்கள் உட்பட பெரும் சவால்களை தொடர்ந்தும் ஏற்படுத்தி வருகிறது.

Agassiz நகரில் மண் சரிவுகளுக்கு இடையே சிக்கிய சுமார் 275 பேரை உலங்கு வானூர்தி மூலம் மீட்கும் பணி திங்கள் மாலை ஆரம்பமானது.

Agassiz நகருக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை 7 இல் 80 முதல் 100 வாகனங்கள் மண்சரிவில் சிக்கி கொண்டதாக திங்கள் காலை தெரிவிக்கப்பட்டது.

கனேடிய ஆயுதப் படைகள் உட்பட மீட்புக் குழுவினர் இவர்களுக்கு உதவி வருகின்றனர்.

7,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசிக்கும் Merritt நகரம் உட்பட பல்வேறு நகரங்களில் வெளியேற்ற உத்தரவுகள் அமுலில் உள்ளன.

குடியிருப்பாளர்களை பொது பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றுமாறு முதல்வர் John Horgan வலியுறுத்தினார்.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட British Columbia மாகாணத்திற்கு மீட்பு உதவியை வழங்க கனடிய அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

பேரழிவுகரமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உதவ தயாராக இருப்பதாக பிரதமர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

British Columbia மாகாணத்திற்கு தேவையான ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அவசரகால தயார்நிலை அமைச்சர் Bill Blair கூறினார்.

Related posts

இந்த வாரம் காலாவதியாகிறது COVID தொற்று கால இரண்டு உதவித் திட்டங்கள்! !

Gaya Raja

இந்தியாவில் இருந்து கிடைக்கும் விசா விண்ணப்பங்கள் உன்னிப்பாக பரிசீலிக்கப்படும்?

Lankathas Pathmanathan

COVID விதிகளை மீறியதற்காக $15 மில்லியன் அபராதம்

Lankathas Pathmanathan

Leave a Comment