ஒரு மாதத்தில் அதிக COVID தொற்றுக்களை Ontario மாகாணம் சனிக்கிழமை பதிவு செய்தது.
சனிக்கிழமை 661 புதிய தொற்றுக்களையும் ஆறு இறப்புகளையும் சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
இதன் மூலம் Ontarioவில் நாளாந்த தொற்றின் ஏழு நாள் சராசரி இப்போது 559 ஆக உள்ளது.
இது கடந்த வாரத்தில் 426 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொற்றின் காரணமாக குறைந்தது 263 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாகாணம் தெரிவித்துள்ளது.
Ontarioவில் 11.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.
சனிக்கிழமையுடன் Ontarioவில் தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,927ஆக அதிகரித்தது.