தேசியம்
செய்திகள்

Toronto தமிழர் ஒருவர் மீது 93 பாலியல் குற்றச்சாட்டுகள்!

Torontoவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் மீது 93 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
36 வயதான ரமணன் பத்மநாதன் மீது இந்தக் குற்றச்சாட்டுகளை Toronto காவல்துறையினர் பதிவு செய்தனர்.
இணையவழி மூலம் குழந்தைகளிடம் ஆபாச புகைப் படங்களை பெற்ற குற்றச்சாட்டுக்களை இவர்  எதிர்கொள்கிறார்.
கடந்த March மாதம் முதலில் கைது செய்யப்பட்ட இவர் மீது 25 குற்றச்சாட்டுக்கள் பதிவாகின.
இவர் மீதான தொடர்ந்த விசாரணையின் பின்னர் மேலும் 68  குற்றச்சாட்டுக்களை காவல்துறையினர் பதிவு செய்தனர்.
இவரினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என கவலை வெளியிட்டுள்ள காவல்துறையினர், தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது குற்றத் தடுப்பு பிரிவினரை அநாமதேயமாக அணுகுமாறு கோரியுள்ளனர்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 43 கனேடியர்கள் வெளியேறினர்!

Gaya Raja

P.C. மாகாண சபை குழுவில் இருந்து விலக்கப்பட்டது குறித்து MPP ஏமாற்றம்!

Lankathas Pathmanathan

2023 முதல் மூன்று மாதங்களில் 145,000 புதிய குடிவரவாளர்களை வரவேற்ற கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment