தேசியம்
செய்திகள்

குழந்தைகளுக்கான தடுப்பூசியை அங்கீகரிப்பது குறித்த முடிவு அடுத்த இரண்டு வாரங்களில் வெளியாகும் : Health கனடா

5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒன்று முதல் இரண்டு வாரங்களில் கனடாவில் தடுப்பூசியை அங்கீகரிக்கப்படலாம் என Health கனடா தெரிவித்தது.
குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியை அங்கீகரிப்பது குறித்த முடிவு அடுத்த ஒன்று முதல் இரண்டு வாரங்களில் வெளியாகும்  என Health கனடா கூறுகிறது.
இதன் மூலம் சில குழந்தைகள் நத்தார் தினத்திற்குள் ஒரு தடுப்பூசியைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கனடாவின் சில பகுதிகள் விடுமுறைக் காலத்திற்கு முந்தைய வாரங்களில் COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பைக் காணும் நிலையில் இன்றைய Health கனடாவின் அறிவித்தல் வெளியானது.
5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசிகான மதிப்பாய்வு தொடர்வதாக கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் Supriya Sharma வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
கனடாவில் தடுப்பூசிக்குத் தகுதிபெறாத ஒரு தரப்பினரான 12 வயதுக்கு  உட்பட்டவர்கள் நாடு முழுவதும் COVID தொற்றின் அதிக எண்ணிக்கை விகிதங்களைக் கொண்டுள்ளனர் என கனடாவின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் Theresa Tam அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

கனடிய அரசுக்கும் – பொதுச் சேவை சங்கத்துக்கும் இடையில் தொடரும் பேச்சுவார்த்தை

Lankathas Pathmanathan

Liberal கட்சியில் இணையும் Mark Carney?

Lankathas Pathmanathan

Omicron பரவலை கட்டுப்படுத்த Ontario உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment