வானிலை மாற்றம், கட்டுப்பாடுகளின் விலத்தல் ஆகியன COVID தொற்று எண்ணக்கையில் கொந்தளிப்பை உருவாக்குகின்றன என கனடாவின் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் புதிய விபரங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கனடாவின் தலைமை மருத்துவர் Theresa Tam இந்தத் தகவலை வெளியிட்டார்.
கனடாவின் சில பகுதிகளில் தொற்றுகள் அதிகரிப்பதற்கு குளிர்ச்சியான வானிலை மற்றும் தளர்வு கட்டுப்பாடுகள் பங்களிக்கின்றன என அவர் கூறினார்.
மாகாணங்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்திவரும் நிலையில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தொடர்ந்தும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக வைத்தியர் Tam தெரிவித்தார்.