December 12, 2024
தேசியம்
செய்திகள்

இளம் பெண்களை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு 70 வயதான தமிழர் மீது பதிவு!

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் Scarboroughவில் இளம் பெண்களை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக 70 வயது தமிழர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

70 வயதான Oshawa  குடியிருப்பாளரான அரசகுமார் சவேரிமுத்து மீது 6 பாலியல் வன்கொடுமை உட்பட 13 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 28ஆம் திகதி இவர் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்

1994 முதல் 1996க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்தாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

9 முதல் 14 வயதுக்குட்பட்ட எண்ணிக்கை குறிப்பிடப்படாத சிறுமிகளை இந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக  காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இவரினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என கவலை வெளியிட்டுள்ள காவல்துறையினர், தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது குற்றத் தடுப்பு பிரிவினரை அநாமதேயமாக அணுகுமாறு கோரியுள்ளனர்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

AstraZeneca தடுப்பூசி பாதுகாப்பானது ; கனடிய பிரதமர் உறுதி

Gaya Raja

கனடாவின் சட்ட நடைமுறைக்கு ஒத்துழைக்க இந்தியாவுக்கு இங்கிலாந்து அழைப்பு

Lankathas Pathmanathan

Saskatchewan மாகாண முதல்வரிடன் மன்னிப்பு கோரிய பிரதமர் அலுவலகம்

Lankathas Pathmanathan

Leave a Comment