தேசியம்
செய்திகள்

Remembrance தினம் – கனடிய தேசிய கொடிகள் மீண்டும் அரைக் கம்பத்தில்: மத்திய அரசாங்கம்

Remembrance தினத்திற்கு கனடிய தேசிய கொடிகளை, மீண்டும் அரைக் கம்பத்தில் குறைக்கும் திட்டங்களை வெள்ளிக்கிழமை மத்திய அரசாங்கம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

November 11ஆம் திகதியன்று கூட்டாட்சி கட்டடங்களில் கொடிகளை அரைக் கம்பத்தில் குறைக்கும் பாரம்பரியத்தை தொடர உத்தேசித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

Kamloops, British Colombiaவில் உள்ள ஒரு முன்னாள் குடியிருப்புப் பாடசாலையில் முதன் முறையாக பெயர்
குறிக்கப்படாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து May மாத இறுதியில் கனடிய கொடிகள் அரைக் கம்பத்திற்கு தாழ்த்தப்பட்டன.

இந்த நிலையில் அவை தற்காலிகமாக மீண்டும் உயர்த்தப்பட்ட வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

தனது அரசாங்கம் நாடு முழுவதும் உள்ள முதற்குடியினர் சமூகங்களுடன் நாடு தழுவிய Remembrance தின நிகழ்வுகளுக்கு முன்னதாக கொடிகளை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்து பேசி வருவதாக கடந்த செவ்வாயன்று, பிரதமர் Justin Trudeau கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto பாடசாலைகளில் மீண்டும் முககவசம்?

Lankathas Pathmanathan

Ontario மருத்துவமனைகளில் அதிகரிக்கும் COVID தொற்றாளர்கள் அனுமதி

Lankathas Pathmanathan

நான்காவது அலைக்கு மத்தியில் பொதுத் தேர்தலை பாதுகாப்பாக நடத்தலாம்!

Gaya Raja

Leave a Comment