வணிகங்களுக்கும் தனிநபர்களுக்குமான COVID தொற்று கால உதவித் திட்டங்கள் இந்த வாரம் காலாவதியாகிறது.
CERS எனப்படும் கனடா அவசர வாடகை மானியம், CEWS எனப்படும் கனடா அவசர ஊதிய மானியம் போன்ற திட்டங்கள் எதிர்வரும் 23ஆம் திகதியுடன் முடிவடைகின்றன.
இந்த இரண்டு திட்டங்களும் 2020ஆம் ஆண்டு முதலில் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல முறை நீட்டிக்கப்பட்டன.
200,000க்கும் மேற்பட்ட வணிக உரிமையாளர்கள் CERS உதவியைப் பெற்றுள்ளனர்.
450,000க்கும் அதிகமானவர்கள் CEWS இலிருந்து நன்மைகளைப் பெற்றுள்ளனர்.
CERS, CEWS திட்டங்கள் முடிவடையும் திகதி சிறு வணிக வாரத்தின் கடைசி நாளான 23ஆம் திகதியாகும்.
இந்த நிலையில் சிறு வணிக வாரத்தை ஒட்டி கனேடிய சிறு வணிக உரிமையாளர்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, புதுமைக்காக நன்றி தெரிவிக்கும் ஒரு அறிக்கையை பிரதமர் Justin Trudeau ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தார்.