Ontarioவை மீண்டும் திறக்கும் திட்டத்தின் புதிய விவரங்களை மாகாண முதல்வர் Doug Ford வெளியிட்டார்.
தனது அரசாங்கம் மீண்டும் திறக்கும் திட்டத்தின் இறுதி கட்டத்தில் இருந்து வெளியேறுவதற்கான திட்டங்களை இறுதி செய்து வருவதாக Ford வெள்ளிக்கிழமை கூறினார்.
தற்போது நடைமுறையில் உள்ள அதிக பொது சுகாதார நடவடிக்கைகளை எச்சரிக்கையுடன் விலக்க திட்டமிடுவதாகவும் Ford தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது முதல்வர் இந்த கருத்தை தெரிவித்தார்.
மாகாணத்தை மீண்டும் திறக்கும் திட்டத்தின் புதிய விவரங்கள் அடுத்த வாரம் வெளிவரும் எனவும் Ford கூறினார்.
வணிகங்களும் குடியிருப்பாளர்களும் வரவிருக்கும் மாதங்களில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றிய தெளிவான வழிகாட்டுதல்களை பெறுவார்கள் எனவும் முதல்வர் Ford தெரிவித்தார்.