தேசியம்
செய்திகள்

எதிர்வரும் 25 அல்லது 26ஆம் திகதி கனடாவின் புதிய அமைச்சரவை பதவியேற்கும்!

பிரதமர் Justin Trudeauவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு October மாதம் 25 அல்லது 26ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது அமைச்சரவையை தேர்ந்தெடுப்பதில், Trudeau பாலினம் மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவத்தை சமப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு செய்வதன் மூலம், பிரதமர் தனது அமைச்சர் பட்டியலில் சில புதியவர்களை இணைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையில் யார் பதவி உயர்வு பெறலாம் என்ற கேள்வி பரவலாக உள்ளது.

Trudeau ஏற்கனவே Chrystia Freelandடை துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

அதை Freeland ஏற்றுக்கொண்டுள்ளார்.கடந்த மாதம் பிரதமர் இதனை அறிவித்த போது, வரவிருக்கும் வாரங்களில் ஏனைய அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ள உள்ளவர்களுடன் உரையாட உள்ளதாகவும் கூறினார்.

Related posts

FIFA தரவரிசையில் 40வது இடத்திற்கு கனடிய அணி முன்னேற்றம்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 23ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Ottawa நகரில் அவசரகால நிலை பிரகடனம்

Lankathas Pathmanathan

Leave a Comment