கனடாவின் பொது சுகாதார நிறுவனம் புதிய தலைமையின் கீழ் வரவுள்ளது.
பொது சுகாதார நிறுவனத்தின் தலைவராக இருந்த Iain Stewart ஒரு வருட காலத்தின் பின்னர் பதவி விலகுகின்றார்.
இந்த நிலையில் COVID தடுப்பூசி வெளியீட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய Stewartடின் தலைமைக்கு பிரதமர் Justin Trudeau நன்றி தெரிவித்தார்.
Stewart முன்னர் வகித்த கனடாவின் தேசிய ஆராய்ச்சி சபையின் தலைவர் பதவிக்கு திரும்பவுள்ளார்.
பொது சுகாதார நிறுவனத்தின் புதிய தலைவராக வைத்தியர் Harpreet S. Kochhar எதிர்வரும் 12ஆம் திகதி பதிவி ஏற்கவுள்ளார்.
அவர் தற்போது சுகாதார இணை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது சேவையின் மூத்த பதவிகளில் தொடர்ச்சியான மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டது.