December 12, 2024
தேசியம்
செய்திகள்

வார விடுமுறையில் Ontarioவில் நீக்கப்படும் COVID கட்டுப்பாடுகள்!

பொது மக்கள் ஒன்றுகூடும் சில பெரிய இடங்களுக்கான எண்ணிக்கையில் உள்ள COVID பரவல் கட்டுப்பாடுகளை Ontario நீக்குகிறது.

இதில் இசை நிகழ்வுகள், விளையாட்டு, திரையரங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் பொது இடங்களும் அடங்குகின்றன.

இந்த வார விடுமுறையில் இந்த கட்டுப்பாடுகளை நீக்க Ontario முடிவு செய்துள்ளது.

இது போன்ற இடங்களில் குறைந்த எண்ணிக்கையிலான தொற்றின் பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.

சனிக்கிழமை நள்ளிரவு முதல் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என அரசாங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் அறிவித்தது.

ஆனாலும் 100 சதவீதம் எண்ணிக்கை திறன் கொண்ட இடங்களில் தடுப்பூசி சான்று தேவைப்படும்.

தவிரவும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்ற பிற பொது சுகாதார நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

111 கடந்த மாதம் கனடாவில் 157 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இன்று கனடாவின் புள்ளி விபரத் திணைக்களம் September மாதத்திற்கான புதிய வேலை வாய்ப்புகள் விபரங்களை வெளியிட்டது.

அதில் August மாதத்தில் 7.1 சதவீதத்தில் இருந்த வேலையில்லாதோர் விகிதம் September மாதம் 6.9 சதவீதமாகக் குறைந்ததாக குறிப்பிடப்பட்டது

இது September மாதம், பெரும் தொற்றுக்கு முந்தைய நிலைக்கு முதல் முறையாக வேலை வாய்ப்பை மீண்டும் கொண்டு வருகிறது.

வேலை செய்ய விரும்பினாலும் வேலை தேடாத கனடியர்கள் கணக்கீடுகளில் சேர்க்கப்பட்டால் வேலை வாய்ப்பின்மை விகிதம் September மாதம் 8.9 சதவிகிதமாக இருந்திருக்கும் என புள்ளி விபரத் திணைக்களம் கூறியது.

Related posts

COVID காரணமாக மரணமடைந்தவர்கள் 92.8 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்

Lankathas Pathmanathan

Ontarioவின் சில பகுதிகளில் வார இறுதியில் 80 CM வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

5 மில்லியன் டொலர் வெற்றி பெற்ற தமிழர்கள்

Leave a Comment