Conservative கட்சியின் தலைமைப் பதவியில் நீடிப்பதற்கு தன்னிடம் போதுமான ஆதரவு இருப்பதாக Erin O’Toole கூறினார்.
தேர்தலுக்குப் பின்னர் செவ்வாய்கிழமை முதலாவது தடவையாக Conservative கட்சியின் உறுப்பினர்கள் Ottawaவில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் நடைபெற்ற வாக்களிப்பில் கட்சித் தலைமை பதவியில் இருந்து O’Tooleலை அகற்றுவதற்கான அதிகாரத்தை Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கியுள்ளனர்.
ஆனால் Conservative கட்சி ஒரு இணைந்த குடும்பம் என இந்தக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் O’Toole கூறினார்.
இந்த நிலையில் தலைமைப் பதவியில் நீடிப்பதற்காக தன்னிடம் போதுமான ஆதரவு இருப்பதாக நம்புவதாகவும் O’Toole தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சீர்திருத்தச் சட்டத்தை கட்சி கடைப்பிடிப்பது உட்பட நான்கு முக்கிய வாக்களிப்புகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற Conservative கட்சியின் கூட்டத்தில் இடம்பெற்றன.