இந்த வடிவமைப்புக்கான அடிப்படை வழிகாட்டிகளாக ஐந்து விடயங்களை இயக்குனர் சபை மனதிலிருத்தியது:
(1) கலந்தாய்வுகள் அடிப்படையில் சேவை திட்ட வெளிகள் (programming space based on consultations)
(2) சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உறுதிப்பாடு (commitments to the environment)
(3) பூர்வகுடி குமுகங்களை மதித்தல் (respect to Indigenous communities)
(4) குடியிருப்பாளர்களின் கரிசனங்களுக்கான தீர்வுகள் (solutions to resident concerns)
(5) தமிழ்ப் பண்பாடும் வரலாறும் (Tamil culture and history)
தமிழரின் பாரம்பரியக் கட்டிடக்கலை (மைய முற்றம்), தமிழ்மொழியும் சங்க இலக்கியக் கோட்பாடுகளும் (ஐந்திணைகள்), புலப்பெயர்வும் ஏதிலி வாழ்வும் புகலடைவையும் உள்ளடக்கிய தமிழரின் அண்மைக்கால வரலாறு (கப்பல்) ஆகியவற்றால் வடிவமைப்பு அகத்தூண்டல் பெற்றுள்ளது.
இந்த வடிவமைப்புகள் குறித்து கனேடிய தமிழர்களின் கருத்துக்களை வழங்க இயக்குனர் சபை அழைப்பு விடுத்துள்ளது. உங்கள் பின்னூட்டங்களை October 13க்கு முன் இணையத்தளத்தின் (www.tamilcentre.ca) மூலம் வழங்கலாம்.
இந்த வடிவமைப்புக்கு முந்திய ஆய்வு குறித்து மேலும் அறிந்துகொள்ள, October 13 அன்று மாலை ஏழு மணிக்கு நடைபெறவிருக்கும் நிகர்நிலைக் குமுகப் பொதுக்கூட்டத்தில் (virtual community townhall) கலந்து கொள்ளலாம்.
இந்த பொதுக்கூட்டத்திலே கலந்து கொள்வதற்கு பதிவு செய்ய
https://www.eventbrite.ca/e/