உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான முதலாவது தேசிய தினம் – National Day for Truth and Reconciliation – வியாழக்கிழமை கனடாவில் கொண்டாடப்படுகிறது.
இது கனடாவின் முதற் குடி மக்களுக்கு எதிரான தவறான நடத்தை மற்றும் குடியிருப்பு பாடசாலைகளில் நீடித்த வன்முறைகள் குறித்து கனேடியர்கள் அறிந்து கொள்வதற்கு ஒரு தினமாகும்.
மத்திய அரசாங்கம் இந்தத் தினத்தை சட்டப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 94 பரிந்துரைக்கான நடவடிக்கையாக சட்டரீதியான விடுமுறையை உருவாக்குவதற்கான மசோதா கடந்த June மாதம் 3ஆம் திகதி அரச ஒப்புதல் பெற்றது.
இந்த விடுமுறை காரணமாக வியாழக்கிழமை பொதுத் துறையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் பணியிடங்கள், வணிகங்கள், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூடப்படும்.
பல மாகாணங்கள் இந்த நாளை கடைபிடிக்கின்றன.உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினம் Ontarioவில் சட்டபூர்வமான விடுமுறையாக அங்கீகரிக்கப்படவில்லை.