தேசியம்
செய்திகள்

Sudburyயில் சுரங்கப் பாதையில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர்!

Sudburyயில் நிலத்தடியில் சுரங்கப் பாதையில் சிக்கிய அனைத்து சுரங்கத் தொழிலாளர்களும் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.

Vale’s Totten சுரங்கத்தில் நிலத்தடியில் சிக்கி இருந்த 39 பேரும் மீட்கப்பட்டதாக புதன்கிழமை அதிகாலையில் அந்த நிறுவனம் அறிவித்தது.

தமது 39 ஊழியர்களை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் மீட்பதே தமது முன்னுரிமையாக இருந்ததாக சுரங்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

ஞாயிறு காலை தங்கள் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் 7 மணிக்கு நிலத்தடிக்குச் சென்ற தொழிலாளர்கள் சுரங்கத்தில் ஏற்பட்ட சேதம் விளைவிக்கும் ஒரு சம்பவத்தால் சிக்கினர்.இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்களும் ஏற்படவில்லை.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 07 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan

இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கான தடை நீட்டிப்பு

Gaya Raja

2024 Paris Olympics: ஆறாவது தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment