தேசியம்
செய்திகள்

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி October மாதம் ஆரம்பமாகும்: சுகாதார அமைச்சர் 

ஐந்து முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியின் பயன்பாடு October மாதம் ஆரம்பமாகும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கூறினார்.
Pfizer நிறுவனத்தின் தடுப்பூசியின் பயன்பாடு எதிர்வரும் வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் Patty Hajdu தெரிவித்தார்

தடுப்பூசி தரவு தொடர்பாக அரசாங்க சுகாதார அதிகாரிகள் Pfizer நிறுவனத்துடன்  தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளனர் எனவும்  Hajdu கூறினார்.

Pfizer நிறுவனத்திடமிருந்து தரவைப் பெற்றவுடன், கட்டுப்பாட்டாளர்கள் இந்தத் தரவை விரைவாக மதிப்பாய்வு செய்வார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

BioNTech உடன் இணைந்து உருவாக்கப்பட்ட தமது தடுப்பூசி ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என Pfizer  நிறுவனம் கடந்த வாரம் கூறியிருந்தது.

Related posts

Pharmacare ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிரதமர் அழைப்பு

Lankathas Pathmanathan

NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு ஆரம்பம்

Lankathas Pathmanathan

Haiti இல் கடத்தப்பட்டவர்களில் கனேடியர் ஒருவரும் அடங்கல் !

Gaya Raja

Leave a Comment