கனேடிய நாடாளுமன்றத்திற்கு இம்முறை மூன்று புதிய பூர்வகுடி உறுப்பினர்கள்
தெரிவாகியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான பூர்வகுடிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தல் இதுவாகும். Edmonton – Griesbach தொகுதியில் Blake Desjarlais வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். Simcoe – North தொகுதியில் Adam Chambers வெற்றி பெற்றார். இவர்கள் இருவரும் Metis சமூகத்தைச் சேர்ந்தவர்கள். Nunavut தொகுதியில் Lori Idlout வெற்றிபெற்றார். இம்முறை தேர்தலில் போட்டியிட்ட 78 பூர்வகுடி வேட்பாளர்களில் 9 பேர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். இவர்கள் 9 பேரும் மீண்டும் தெரிவாகியுள்ளனர். இம்முறை புதிதாக தெரிவான மூன்று புதிய பூர்வகுடி உறுப்பினர்களுடன் மொத்தம் 12 பூர்வகுடி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கவுள்ளனர். இது 2019 தேர்தலில் இருந்து ஒரு உறுப்பினரின் அதிகரிப்பாகும்.
கனடா மக்கள் கட்சியின் ஆதரவு தளத்தின் உயர்வு!
கனடா மக்கள் கட்சியின் (People’s Party of Canada – PPC) ஆதரவில் ஏற்பட்ட உயர்வை எவ்வாறு கணிப்பிடுவது என்பதில் வல்லுநர்களுக்கே கேள்வியாக உள்ளது. ஆனாலும் தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட மக்கள் கட்சியின் எழுச்சியை புறக்கணிக்க முடியாது. தனது சொந்த தொகுதியில் வெற்றி பெறாத போதிலும், இந்தத் தேர்தல் முடிவை மிகப்பெரிய வெற்றி என கட்சியின் தலைவர் Maxime Bernier கருதுகிறார்.மக்கள் கட்சி 820,000க்கும் அதிகமான வாக்குகளை (ஐந்து சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள்) இம்முறை பெற்றது. இது 2019இல் பெற்ற வாக்குகளின் 1.6 சதவீதத்திலிருந்து இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.வெள்ளை தேசியவாதிகள், நியோ-நாஜிக்கள் (Neo-Nazis), பிற தீவிர வலதுசாரி குழுக்களால்அங்கீகரிக்கப்பட்ட குடியேற்றத்தை எதிர்க்கும், முடக்கத்தை எதிர்க்கும் தளத்தில் இயங்கும்கட்சியான மக்கள் கட்சி, தடுப்பூசிகளுக்கு எதிரானவர்கள், அரசுக்கு எதிரான எதிர்ப்பாளர்கள்,துப்பாக்கி உரிமை ஆர்வலர்களின் தங்குமிடமாக மாறியுள்ளது.இம்முறை மக்கள் கட்சி வாக்குச் சாவடியில் கண்ட வெற்றி, தீவிர வலதுசாரி இயக்கங்களின்பாதிப்பில் இருந்து கனடா விதிவிலக்கானது என்ற கருத்தை அகற்றியுள்ளது.
Liberal கட்சியின் சுயேட்ச்சை உறுப்பினர்!
Liberal கட்சி வேட்பாளராக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த Kevin Vuong, சுயேட்ச்சை
உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அமரவுள்ளார்.பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு மத்தியில், Spadina–Fort York தொகுதி வேட்பாளர் KevinVuong தனது பிரச்சாரத்தை இடைநிறுத்த வேண்டும் என Liberal கட்சியின் தலைமை வாக்களிப்புக்கு சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. ஆனாலும் முன்கூட்டிய வாக்களிப்பு,தபால் மூல வாக்களிப்பு என்பன முடிவடைந்த நிலையில் தேர்தல் தினத்தின் Vuong வெற்றி பெற்றார்.
இவரது பதவி விலகலை பலரும் கோரியுள்ள நிலையிலும், தன்னை தெரிவுசெய்த வாக்காளர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புவதை Vuong உறுதிப்படுத்தியுள்ளார். தனது தேர்வு குறித்து அனைவரும் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அவர் ஒப்புக் கொண்டார். தன் மீதான குற்றச்சாட்டுகளை Vuong மறுத்துள்ளார்.
கடந்த தேர்தலில் பசுமை – இம்முறை Liberal!
கடந்த தேர்தலில் பசுமை (Green) கட்சியின் சார்பில் தேர்தலில் வெற்றிபெற்ற Jenica Atwin இம்முறை Liberal கட்சியின் சார்பில் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டு பசுமை கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற Atwin, கடந்த June மாதம் கட்சி மாறினார். இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதல்கள் தொடர்பான பசுமைக் கட்சியில் உள் விரிசல்கள் நிலவுவதால் கட்சியை விட்டு வெளியேறுவதாக Atwin அப்போது கூறினார்.
இதற்கு முன்னர், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் குறித்த பசுமைக் கட்சியின் தலைவி Annamie Paulலில் நிலைப்பாட்டை Atwin வெளிப்படையாக விமர்ச்சித்திருந்தார். இதன் எதிரொலியாகபசுமைக் கட்சியின் தலைவி Paul நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றையும் எதிர்கொண்டிருந்தார். இம்முறை Conservative கட்சியின் வேட்பாளருக்கு எதிரான கடுமையான போட்டியில் Atwin இறுதியில் வெற்றி பெற்றார். இவர் New Brunswick மாகாணத்தின் Fredericton தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்.
இரண்டு கட்சித் தலைவர்கள் தோல்வி!
தேர்தலை எதிர்கொண்ட ஆறு பிரதான கட்சிகளின் இரண்டு கட்சித் தலைவர்கள் வெற்றிபெறத் தவறியுள்ளனர். கனடா மக்கள் கட்சியின் தலைவர் Maxime Bernier தான் போட்டியிட்ட Richard Lehoux தொகுதியில் தோல்வியடைந்தார் .அதேபோல் பசுமைக் கட்சியின் தலைவி Annamie Paul தான் போட்டியிட்ட Toronto Centre தொகுதியில் 8.5 சதவீத வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தார். Papineau தொகுதியில் Liberal தலைவர் Justin Trudeau, 50 சதவீதமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். Durham தொகுதியில் Conservative தலைவர் Erin O Toole, Beloeil-Chambly தொகுதியில் Bloc Québécois தலைவர் Yves-François Blanchet, Burnaby South தொகுதியில் NDP தலைவர் Jagmeet Singh ஆகியோர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகளாக தேர்வாகி வெற்றி பெற்றனர்.
மூன்று அமைச்சர்கள் தோல்வி!
கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த Justin Trudeauவின் 37 பேர் கொண்ட அமைச்சரவையில் 34 பேர் மீண்டும் வெற்றிபெற மூவர் இம்முறை தோல்வியடைந்து ள்ளனர். Peterborough – Kawartha தொகுதியில் போட்டியிட்ட Maryam Monsef, South Shore–St. Margarets தொகுதியில் போட்டியிட்ட Bernadette Jordan, King-Vaughan தொகுதியில் போட்டியிட்ட Deb Schulte ஆகியோரே தோல்வியடைந்த அமைச்சர்கள். இவர்கள் மூவரும் பெண்கள் என்பது குறிப்பிடவேண்டியது.
கவனிக்க வேண்டிய மூன்று அரசியல் புதுமுகங்கள்!
வெளியான தேர்தல் முடிவுகளில் சில குறிப்பிடத்தக்க புதியவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான பின்னணியை கொண்டுள்ளனர். George Chahal, Calgaryயில் Liberal கட்சியின் ஒரே தொகுதியை வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவருக்கு Trudeauவின் அமைச்சரவையில் ஒரு ஆசனம் காத்திருக்கலாம். Mike Morrice, பசுமை கட்சியின் சார்பில் Ontarioவில் வெற்றிபெற்ற முதலாவது நாடாளுமன்ற உறுப்பினரா வார். Michelle Ferreri, Liberal கட்சியின் மிகப்பெரிய இழப்பாக கருதப்படும் Peterborough-Kawartha தொகுதியின் தோல்விக்கு காரணமாக இருந்தவர். இந்த முடிவின் மூலம், ஏறக்குறைய 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தத் தொகுதி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாத ஒருவரினால் பிரதிநிதித்துவப்படவுள்ளது.