COVID தொற்றின் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் Albertaவிற்கு உதவ வளங்களை அனுப்புவதாக கனேடிய ஆயுதப்படைகள் உறுதி செய்துள்ளன.
தொற்றின் நான்காவது அலையின் போது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்த தொற்றாளர்களை எதிர்கொள்ளும் Albertaவின் தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு இந்த உதவிகள் அனுப்பப்படவுள்ளன.
ஏனைய மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளை மாற்றுவதற்காக விமானங்களும் பணியாளர்களும் தயார் படுத்தப்படுகின்றனர்.
இவர்கள் வெள்ளிக்கிழமை முதல் Albertaவுக்கு அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் Albertaவில் முப்பரி மாற்றத்தின் முக்கிய கூறுகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக மாகாண சுகாதார அவசர பிரிவின் தலைவர் தெரிவித்தார்.
இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு இறப்பார்கள் எனவும் அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை மாத்திரம் Albertaவில் 1,651 தொற்றுக்களும் 11 மரணங்களும் பதிவானது இங்கு குறிப்பிடத்தக்கது.