திங்கட்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தலில் Liberal கட்சி மீண்டும் வெற்றி பெற்றது.
ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான ஆசனங்களை Liberal கட்சி வெற்றி பெறவில்லை.
தொடர்ந்தும் இரண்டாவது தேர்தலில் Liberal கட்சியின் தலைவர் Justin Trudeau சிறுபான்மை அரசாங்கத்தை வெற்றி பெற்றார்.
செவ்வாய் இரவு 11 மணி வரையான (EST) முடிவுகளின் அடிப்படையில் Liberal கட்சி 158 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அல்லது முன்னிலையில் உள்ளது.
Liberal கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான ஒருவர் சுயேச்சை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் செயல்படுவார்.
Conservatives கட்சி 119 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அல்லது முன்னிலையில் உள்ளது.
Bloc Quebecois கட்சி 34 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அல்லது முன்னிலையில் உள்ளது.
NDP கட்சி 25 தொகுதிகளில், பசுமை கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அல்லது முன்னிலையில் உள்ளது.