அமெரிக்க அரசியல் தலைவர்கள் கனேடிய தேர்தலில் தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முன்னாள் அமெரிக்க அதிபர் Barack Obama தனது ஆதரவை Liberal தலைவர் Justin Trudeauவுக்கு வியாழக்கிழமை தெரிவித்தார்.
Trudeauவை ஒரு திறமையான தலைவராக வர்ணித்த Obama, ஜனநாயக விழுமியங்களுக்கு வலுவான குரலாகவும் அவர் இருந்தார் எனவும் கூறினார்.
வெள்ளிக்கிழமை முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான Hillary Clinton, Trudeauவுக்கான தனது ஆதரவையும் தெரிவித்தார்.
அதேவேளை அமெரிக்க Senator Bernie Sanders தனது ஆதரவை NDP தலைவர் Jagmeet Singhக்கு வெள்ளியன்று வழங்கினார்.