தேசியம்
செய்திகள்

கனடாவில் 78 சதவிகிதத்தினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்!

கனடாவில் COVID தடுப்பூசி ஏற்ற தகுதியுள்ளவர்களில் 78 சதவிகிதத்தினர் வெள்ளிக்கிழமை காலை வரை முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

வெள்ளியன்று நாடளாவிய ரீதியில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தை அண்மிக்கிறது.

சுகாதார அதிகாரிகள் மொத்தம் 5,067 தொற்றுக்களை வெள்ளிக்கிழமை பதிவு செய்தனர்.

மீண்டும் அதிகூடிய தொற்றுக்களை Alberta மாகாணம் பதிவு செய்தது. Albertaவில் 2,020 தொற்றுகளும் 18 மரணங்களும் பதிவாகின.

தவிரவும் Quebecகில் 837 தொற்றுகளும் 3 மரணங்களும், Ontarioவில் 795 தொற்றுகளும் 5 மரணங்களும், British Columbiaவில் 768 தொற்றுகளும் 11 மரணங்களும், Saskatchewanனில் 472 தொற்றுகளும் 7 மரணங்களும்
பதிவாகின.

ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா நூற்றுக்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின.

Related posts

நவீனமயமாக்கப்பட்ட அறிவியல் பாடத்திட்டத்தை  அறிவித்த Ontario

Lankathas Pathmanathan

Hydro வெடிப்பின் காரணமாக இரண்டு தொழிலாளர்கள் காயம்

Lankathas Pathmanathan

Ontario, Quebec மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மின்சாரத்தை இழந்தனர்

Leave a Comment