Alberta எதிர்கொள்ளும் COVID தொற்றின் எதிர்தாக்கம், விரைவில் கட்டுப்பாடுகளை நீக்கிய தவறான அணுகுமுறையினால் எதிர்கொள்ளும் விளைவுகளுக்கு ஒரு உதாரணம் என கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி கூறினார்.
மாகாணங்கள் விரைவாக செயல்பட்டால் ஏற்படும் எதிர்தாக்கம் தற்போது Albertaவில் எதிர் கொள்ளப்படுகின்றது என, கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி Theresa Tam வியாழக்கிழமை கூறினார்.
நாங்கள் எப்போதும் இந்த தொற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம் என கூறிய அவர், அடுத்த மாதங்களை கடந்த செல்வது Albertaவிற்கு எளிதான காரியமாக இருக்காது எனவும் கூறினார்.
தேர்தல் பிரச்சாரத்தில் Albertaவின் இன்றைய நிலை ஒரு பரபரப்பான தலைப்பாக வியாழனன்று விவாதிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் தொற்றின் நான்காவது அலைக்கு மத்தியில் தேர்தலை அறிவித்த Liberal தலைவர் Justin Trudeau மீது விமர்சனங்களை முன்வைத்தனர்.
Trudeau மீது விமர்சனம் தெரிவித்த NDP தலைவர் Jagmeet Singh, Alberta முதல்வர் Jason Kenney மீதும் நேரடியாக விமர்சனங்களை முன்வைத்தார்.
Kenneyக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு நேரடியாக பதில் கூற மறுத்த Conservative தலைவர் Erin O’Toole, Trudeau வழங்குவதை விட மாகாணங்களுக்கு அதிக உதவி தேவை எனக் கூறினார்.
தொற்றை எதிர்க்கும் திட்டங்களுக்கு தனது அரசாங்கம் பல பில்லியன் டொலர் உதவிகளை மாகாணங்களுக்கு அனுப்பியுள்ளதாக கூறிய Trudeau, ஏனைய மாகாணங்களை போல Alberta தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தியிருந்தால், நிலைமை வித்தியாசமாக இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.