தேசியம்
கனேடிய தேர்தல் 2021

நம்பிக்கையற்ற நம்பிக்கையாளர் Jagmeet Singh

Jagmeet Singh ஒரு வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர், கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைவர். 42 வயதான Singh, இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், Joe Clarkக்கு அடுத்த படியாக இரண்டாவது இளைய கனேடிய பிரதமராக பதவியேற்பார். கடந்த நான்கு தசாப்தங்களாக, Singh Newfoundland and Labrador, Ontario (Windsor, London, Toronto பெரும்பாகம்) ஆகிய இடங்களில் வசித்தவர். Burnaby தெற்கு தொகுதியில் ஒரு இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் 2019இல் British Colombiaவிற்கு சென்றது ஒரு அத்தியாயத்தை நிறைவு செய்கிறது என்றார் Singh. 2011 முதல் 2017 வரை Ontario மாகாணசபை உறுப்பினராக இவர் பணியாற்றினார். October 1, 2017, அன்று, கனடாவின் NDP கட்சியின் தலைவரானார். வளரும் அனுபவங்களில் வேரூன்றிய மதிப்புகளால் வழிநடத்தப்படுபவர் Singh. இம்முறை அவர் போட்டியிடும் Burnaby தெற்கு தொகுதியில் இப்போது Vancouver நகர பிதாவாகவுள்ள Kennedy Stewart முன்னர் பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியாகும். கட்சியின் தலைவரான பின்னர், தான் பிறந்த Toronto பெரும்பாகத்தில் போட்டியிடவே Singh விரும்பினார். ஆனாலும் மேற்கு கனடா நோக்கி நகர்ந்து, 2019 இடைத்தேர்தலில் Liberal மற்றும் Conservative வேட்பாளர்களை விட கிட்டத்தட்ட 39 சதவிகிதமான அதிகளவு வாக்குகளைப் பெற்று வெற்றி கண்டார். 2019 பொது தேர்தலில் Singh பெற்ற வெற்றியின் விகிதாசாரம் குறுகியது. Conservative வேட்பாளர் வியத்தகு முறையில் தொலைவில் இருக்கவில்லை. வேறு சில கட்சித் தலைவர்களைப் போலல்லாமல், Singh தனது சொந்தத் தொகுதியில் பெரும் தொற்று காலத்தில் கணிசமான நேரத்தை செலவிட்டார். இந்த தேர்தலில் ஒரு Liberal பெரும்பான்மையை தடுப்பதை விட Singh அதிகம் விரும்புவது, ஒரு புதிய ஜனநாயக கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதே. அந்த வெகுமதியை வாக்காளர்கள் அவருக்கு அளிப்பார்களா?

ரம்யா சேது

Related posts

Trudeau மீது சரளைக் கல் வீச்சு – ஒருவர் காவல்துறையினரால் கைது

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: அர்ஜுன் பாலசிங்கம்

Gaya Raja

Leave a Comment