தேசியம்
கனேடிய தேர்தல் 2021

மற்றொரு வாய்ப்பை கோருகிறார் Justin Trudeau

பல கனேடியர்கள் இறுதி இரண்டு ஆண்டுகளை மறக்க விரும்புகிறார்கள். அவர்களில் Justin Trudeauவும் ஒருவர். 49 வயதான Quebec மாகாணத்தின் Papineau தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கனடாவின் பிரதமருமான Trudeau, இப்போது ஏன் தேர்தலை வைக்க வேண்டும் என்ற கேள்வி பலர் மனதிலும் உள்ளது.

சிறுபான்மை அரசாங்கங்கள் பெரும்பாலும் அவரது அரசாங்கத்தை விட நீண்ட காலம் நிலைப்பதில்லை. ஆனாலும் ஒரு பெரும் தொற்றின் மத்தியில் ஏன் இப்போது தேர்தல் என்ற கேள்விக்கான பதில் இந்த தேர்தல் முடிவில் கணிசமான பங்கினை வகிக்கும். Trudeau தற்போதைய அரசியல் சூழல் இரண்டாவது பெரும்பான்மை அரசாங்கத்தை கைப்பற்று வதற்கான வாய்ப்பை தனக்கு வழங்கும் என்ற நம்பிக்கையில் தான் தேர்தலை
கோரினார். இந்தத் தேர்தலின் மூலம், Trudeau கடந்த ஒன்றரை வருடத்தை மறுபரிசீலனை செய்யவோ அல்லது பிரதிபலிக்கவோ விரும்பவில்லை. Trudeauவை பொறுத்தவரை இந்தத் தேர்தல் ஒப்பீட்டளவில் சவால் இல்லாத நான்கு வருடங்களை முன்னெடுக்கும் திறனை வெற்றி கொள்வதை விட அதிகமானது. ஒரு பெரும் தொற்றிலிருந்து வெளியே வருவது அடுத்த 20 முதல் 30 ஆண்டுகள் திட்டமாக அமைகிறது. இதனால் Trudeau ஒரு தீர்வை முன்வைக்க முன்னெப்போதையும் விட அதிகமாக விரும்புகிறார். அதற்கு
அவருக்கு தேவை ஒரு பெரும்பான்மை ஆட்சி. Trudeau போட்டியிடும் Papineau தொகுதி நிச்சயமான ஒரு LIberal கோட்டை. Trudeau, 2008ஆம் ஆண்டில் 41 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் இங்கு வெற்றிபெற்ற பிறகு, இந்தத் தொகுதியை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பிரதிநிதித்துவப்படுத்துகிறார். கடந்த தேர்தலில், அவர் 51.2 சதவிகித வாக்குகளை பெற்றார். இம்முறையும் இங்கு Trudeau பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அவர் COVID நெருக்கடியைக் கையாண்ட முறைக்கான அங்கீகாரமாக நோக்கலாம். அந்த அங்கீகாரத்தை தனது தொகுதியில் Trudeau பெறுவாரா இல்லையா என்பதுதான் Liberal கட்சிக்கான முழு தேர்தல் முடிவிலும் பிரதிபலிக்கும்.

ரம்யா சேது

Related posts

நம்பிக்கையற்ற நம்பிக்கையாளர் Jagmeet Singh

Gaya Raja

கனேடிய தேர்தல் பிரச்சாரம்: இரண்டாவது வாரம்!

Gaya Raja

மூன்று பெரிய கட்சிகள் பிரச்சாரத்திற்கு சுமார் 30 மில்லியன் டொலர்கள் வரை செலவிட முடியும்: கனேடிய தேர்தல் திணைக்களம்

Gaya Raja

Leave a Comment