தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

பிரச்சாரத்தின் போது Liberal தலைவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் நபர் கைது!

தெற்கு Ontarioவில் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த போது Liberal தலைவர் Justin Trudeauவை அச்சுறுத்தியதாக கூறப்படும் ஒருவரை Waterloo பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது.

Cambridgeஇல் கடந்த மாதம் 29ஆம் திகதி ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் இந்த குற்றச்சாட்டுகள் எழுந்ததாக காவல்துறை கூறுகின்றனர்.

Kitchenerரைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாகவும், அவர் மீது இரண்டு மிரட்டல் குற்றச்சாட்டுக்கள் பதிவானதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனாலும் அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை.இதேவேளை Trudeau கலந்துகொண்ட மற்றும் ஒரு பிரச்சார நிகழ்வில் கல் வீசப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக கனடாவின் மக்கள் கட்சியின் Elgin Middlesex London தொகுதியின் தலைவர் Shane Marshall அவரது பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இந்தப் பதவி விலக்கலை உறுதிப்படுத்தினார்.

Trudeau மீது கல் வீசப்பட்ட சம்பவத்தின் பின்னர் RCMP உறுப்பினர்கள் Marshall போல் தோன்றிய ஒருவரை அழைத்துச் செல்லும் புகைப்படம் வெளியாகியிருந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தனது பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரச்சாரங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என Trudeau செவ்வாய்கிழமை கூறியிருந்தார்.

Related posts

Ontario: மூன்று மாதங்களில் முதல் முறையாக 1,000க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja

Quebecகில் அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட மின்தடை

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்: Pierre Poilievre

Lankathas Pathmanathan

Leave a Comment