தேசியம்
செய்திகள்

September30 Ontarioவில் சட்டபூர்வ விடுமுறை இல்லை!

September மாதம் 30ஆம் திகதி Ontarioவில் சட்டபூர்வ விடுமுறையாக இருக்காது என மாகாண அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

Ontario September 30ஆம் திகதியை, தேசிய உண்மை மற்றும் நல்லிணக்க நாளாக (National Truth and Reconciliation Day), அங்கீகரித்து சட்டப்பூர்வ விடுமுறையாக அறிவிக்காது என அரசாங்கம் உறுதி செய்கிறது.

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினம் இந்த ஆண்டு மாகாண பொது விடுமுறை அல்ல என பூர்வீக விவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

கடந்த மாதம், British Colombia அரசாங்கம், September மாதம் 30ஆம் திகதியை உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினமாக அங்கீகரித்தது.

ஏற்கனவே New Brunswick, Alberta மற்றும் Saskatchewan உள்ளிட்ட பிற மாகாணங்கள், September மாதம் 30ஆம் திகதியை சட்டப்பூர்வ விடுமுறையாக மாற்ற முடியாது என்று முடிவு செய்துள்ளன.

இது பழங்குடி சமூகங்களில் இருந்து கடுமையான விமர்சனங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் தமிழர்!

Lankathas Pathmanathan

புதுப்பிக்கப்பட்ட Moderna COVID தடுப்பூசிக்கு அங்கீகாரம்!

Lankathas Pathmanathan

மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து Mitzie Hunter விலகல்

Leave a Comment