December 12, 2024
தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

1,000 நாட்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவுக் குரல்!

1,000 நாட்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை கருத்துத் தெரிவித்தனர்.

இன்று (ஞாயிறு) சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள Michael Kovrig மற்றும் Michael Spavor ஆகியோரின் உறவினர்களுக்கு ஒரு கடினமான நாள் என்பதை தனது முதலாவது பிரச்சார கூட்டத்தில் Liberal தலைவர் Justin Trudeau ஒப்புக்கொண்டார்.

சர்வதேச சமூகமும் கனேடியர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என கூறிய Trudeau, அவர்கள் இருவரையும் விடுவிக்கும் வரை தனது அரசாங்கம் ஓயாது என்றும் உறுதியளித்தார்.

கனடாவின் குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள மனித உரிமைகள் மற்றும் கண்ணியங்கள் இல்லாத இவர்கள் இருவரின் கடந்த 1,000 நாட்கள் எவ்வாறு இருந்தது என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.

Liberal அரசாங்கம் Kovrig மற்றும் Spavorரின் தொடர்ச்சியான தடுப்புக் காவல்களைக் கையாள்வதில் விமர்சனங்களை எதிர் கொண்டுள்ளது.

Liberal அரசாங்கம் அதிக சர்வாதிகார சீனா மீதான கொள்கையில் மென்மையாக இருப்பதாக Conservative கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

September 20 அன்று தாங்கள் அரசாங்கம் அமைத்தால் சீனாவுக்கு எதிராக கடுமையான அணுகுமுறை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Related posts

தீவிரமடையும் பொதுச் சேவை கூட்டணி சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம்

Lankathas Pathmanathan

Quebec தொழிலதிபரின் மரணம் குறித்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இருவர்

Lankathas Pathmanathan

அகதி கோரிக்கையாளர் மத்திய அதிகாரியின் முன்னர் தன்னை கத்தியால் குத்தினார்

Lankathas Pathmanathan

Leave a Comment