தேசியம்
செய்திகள்

Quebec கடத்தப்பட்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்பு: கடத்தல் குற்றச்சாட்டில் தந்தை கைது!

3 வயது சிறுவன் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் Quebec காவல்துறையினரால் ஞாயிற்றுக்கிழமை மதியம் கைது செய்யப்பட்டார்.

இவரினால் கடத்தப்பட்ட  மூன்று வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளான்.

தனது மகனைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 36 வயதான நபர் கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இந்த கடத்தல் எதிரொலியாக பல நாட்கள் Amber எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

3 வயது சிறுவன் மீட்கப்பட்டதையும், அவர் காயமடையவில்லை என்பதையும் காவல்துறையின் அறிக்கை ஒன்று உறுதிப்படுத்தியது

குறிப்பிட்ட சிறுவன் தனது தாயின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்த கடத்தல் குறித்து விசாரணைகளை காவல்துறையினர் தொடர்கின்றனர்

Related posts

நான்கு மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கை

கனடாவின் வருடாந்த பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு

Lankathas Pathmanathan

செய்திகளை கட்டுப்படுத்தும் Google முடிவு தவறானது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment