Ontario மாகாணத்தின் Kitchener மத்திய தொகுதியின் Liberal கட்சி வேட்பாளர் Raj Saini தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.
முறையற்ற நடத்தை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை முடிப்பதாக Saini அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை Liberal கட்சிக்கு புதிய தகவல்கள் நேரடியாக வழங்கப்பட்ட பின்னர் ஒரு மீளாய்வு செயல்முறை ஆரம்பிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்ட அந்த அறிக்கை Saini இனி ஒரு Liberal வேட்பாளராக இருக்க மாட்டார் எனவும் தெரிவித்தது.
ஆனால் இந்தப் புதிய தகவல் என்ன என்பதை அறிக்கை விரிவாக்க வில்லை.
Saini இனி பிரச்சாரம் செய்யமாட்டார் என குறிப்பிட்ட அவரது பிரச்சாரக் குழு, அவரது பெயர் வாக்குச்சீட்டில் இருக்கும் எனவும் தெரிவித்தது.
தேர்தல் திணைக்களத்தின் ஊடாக வேட்பாளர் ஒருவரின் பெயரை பதிவு நீக்கம் செய்வதற்கான காலக்கெடு ஏற்கனவே முடிந்துவிட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.