தேசியம்
கட்டுரைகள்கனேடிய தேர்தல் 2021

இந்தப் பொதுத் தேர்தலில் உள்ள மாற்றங்கள் என்ன?

COVID பெருந்தொற்றின் போது ஒரு பொதுத் தேர்தலை நடத்துவது கனேடியர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்ற கவலைகளுக்கு மத்தியில், அதிகாரிகள் தாமாக முன்வந்து இவ்வாண்டின் வாக்களிப்பு நிலையங்கள் வாக்காளர்களுக்கும் தேர்தல் பணியாளர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளனர்.

இந்த மாதம் (August), கனேடிய தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் இந்த ஆண்டு பொதுதேர்தல் வாக்களிப்பில் உள்ள முக்கிய வேறுபாடுகளையும், தொற்று பரவுவதைத் தடுக்கவடிவமைக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டுதல்களையும் விளக்கினர்.தேர்தல் நாளன்றும் (September 20) வாக்களிப்பின் போதும் “கடுமையான” பாதுகாப்புநடவடிக்கைகள் பின்பற்றப்படும் என செய்தியாளர்களிடம் கனேடிய தேர்தல்கள் திணைக்களத்தின் தலைமை தேர்தல் அதிகாரி Stéphane Perrault தெரிவித்தார்.கடந்த ஆண்டு நாங்கள் நடத்திய ஆலோசனைகளை பிரதிபலிக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக் கவுள்ளோம் என்பதுடன், அனைத்து மட்டங்களிலும் பொதுசுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் தொடர்ந்து பெறவுள்ளோம்,” என அவர் கூறினார். மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளவை பற்றிய விபரம்: COVID பாதுகாப்பு பொது சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, மாகாணங்களிலும் பிராந்தியங்களிலும் வாக்களிக்கும் எவருக்கும் முகத்தை மூடும் வகையிலான முகக்கவசங்களை கனேடிய தேர்தல்கள் திணைக்களம் கட்டாயமாக்கியுள்ளது.

அதற்காக போதிய முகக்கவசங்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் முகக்கவசம் இன்றி வாக்களிக்க வருபவர்களுக்கு அவற்றை விநியோகிக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்களத்தின் சார்பில் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். ஒற்றைப் பயன்பாட்டு பென்சில்கள், கை சுத்திகரிப்பு நிலையங்கள், இடைவெளி பேணுவதற்கான அறிவுறுத்தற் குறியீடுகள் கொண்ட ஏற்பாடுகள் என்பன அனைத்து வாக்களிப்பு நிலையங்களின் நுழைவாயிலிலும் வெளியேறும் பகுதிகளிலும் இருக்கும்.

வாக்களிப்பு நெறிமுறைகளில் (voting guidelines), வாக்காளர்களுடனான நேரடித் தொடர்பை குறைக்கும் நோக்கில், இவ்வாண்டு வாக்களிப்பு நிலையங்களில் மிகக் குறைவான பணியாளர்களே இருப்பார்கள் என கனேடிய தேர்தல்கள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. Plexiglass தடுப்பு மூலம் வாக்காளர்களிடமிருந்து பிரிக்கப்பட்டவாறு மேசைக்கு ஒரு தேர்தல் அதிகாரி இருப்பதை வாக்காளர்கள் காணக்கூடியதாயிருக்கும். மேலும், கதவு கைப்பிடிகள், பணி நிலையங்கள் முதல் ஏனைய அனைத்து மேற்பரப்புகளும் அடிக்கடி சுத்திகரிக்கப்படும். இவ்வாண்டும் தேர்தலுக்கு அதிக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி Perrault, 44 ஆவது பொதுத் தேர்தலுக்கு சுமார் 612 மில்லியன்

டொலர்கள் செலவாகும் என குறிப்பிட்டார். இது, 2019 ஆம் ஆண்டை விட கிட்டத்தட்ட 100 மில்லியன் டொலர்கள் அதிகமாகும். வாக்களிப்பு மாற்றங்கள் வெளிநாட்டில் அல்லது உள்நாட்டில் இருக்கும் வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் இவ்வாண்டு தபால் மூலம் வாக்களிக்க இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இது புதிய நடைமுறையாகும்: முன்னதாக வெளிநாட்டில் வாழும் கனேடியர்கள் அல்லது தமது தேர்தல் தொகுதிக்கு வெளியில் இருப்பவர்கள் மாத்திரம் அவ்வாறு வாக்களிப்பதற்கான இயலுமை இருந்தது.

வாக்குகளை எண்ணுவதற்காக வாக்களிப்பு நேரம் முடிந்தவுடன், முழுமைப்படுத்தப்பட்ட அனைத்து வாக்களிப்பு படிவங்களையும் தேர்தல்கள் அலுவலகம் பெற வேண்டும் என்பதால், தபால் மூலம் கடைசி நேரத்தில் வாக்களிப்பதை தவிர்க்குமாறு Perrault எச்சரிக்கை விடுத்தார். தபால் மூலம் வாக்களிக்க விரும்புபவர்கள் அதனை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என அவர் கூறினார். வாக்களிப்பு படிவங்கள் தங்களை வந்தடைவதற்கும் தேர்தல் நாளன்று தேர்தல்கள் அலுவலகத்தை சென்றடையும் வகையில் அதனை திருப்பி அனுப்புவதற்கும் போதுமான நேரத்தை வாக்காளர்கள் ஒதுக்கிக்கொள்ள வேண்டும், என அவர் தெரிவித்தார். வாக்குகளை எண்ணும் வகையில், தேர்தல் தினத்தில் வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்தில் முழுமைப்படுத்தப்பட்ட அனைத்து தபால் படிவங்களும் வாக்குப் பெட்டிகளில் பெறப்பட வேண்டும் என கனேடிய தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. முதன்முறையாக, முகவரியிடப்பட்டு மீள திருப்பி அனுப்புவதற்கான தபால் கட்டணம் செலுத்தப்பட்ட வகையிலான கடித உறைகள் வாக்களிப்பு படிவங்களுடன் இருக்கும்.

முழுமைப்படுத்தப்பட்ட உங்களின் படிவங்கள் உரிய நேரத்தில் சென்றடையாது என
அஞ்சுகின்றீர்களா?

வாக்காளர்கள் தேர்தல் நாளன்று படிவங்களை நேரடியாக சென்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் அல்லது அவர்களின் தொகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வழங்கலாம் அல்லது அவர்களுக்கு நம்பகமான ஒருவர் மூலம் அதனை செய்யலாம் என தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தபால் மூல வாக்குகள் பெருமளவில் திரும்பி வரும் என எதிர்பார்ப்பதால், தேர்தல் முடிவுகளை பெறுவதில் தாமதம் ஏற்படும் என எண்ணுவதாக தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்கூட்டிய வாக்களிப்பு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படும் எனவும் அலுவலகம்
கூறியுள்ளது. வாக்காளர்கள் தமது வாக்களிப்பு படிவங்களுடன் COVID சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் அடங்கலாக, மேலதிக பரப்புரைத் தகவல்களையும் பெறுவார்கள்.

பெருந்தொற்று காரணமாக, சில வாக்களிப்பு இடங்கள் கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட
இடங்களில் இருந்து மாறுபடலாம் அல்லது முந்தைய தேர்தல்களுக்கு பயன்படுத்தப்பட்டதை விடவாக்காளர் இல்லங்களிலிருந்து சற்று தொலைவில் இருக்கலாம் , என கனேடிய தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வீட்டை விட்டு வெளியில் வசிக்கும் மாணவர்களும், முதியவர்களும் தபால் மூலம் வாக்களிப்பதை திணைக்களம் ஊக்குவிக்கிறது. பொது சுகாதார பரிந்துரைகளின் அடிப்படையில், நீண்ட கால பராமரிப்பு நிலையங்களில் உள்ளவர்களுக்கு எளிமையான வழிவகை எதுவென கனேடிய தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு அமைய முதியவர்களுக்கான வாக்களிப்பு தெரிவுகள் மாறுபடும். அவ்வாறான முதியவர்கள் முன்கூட்டிய தேர்தல் நாட்களிலோ அல்லது தேர்தல் நடைபெறும் நாளன்றோ பராமரிப்பு நிலையங்களில் உள்ள பணியாளர்களின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த விசேட வாக்களிப்பு முறைமை மூலம் பராமரிப்பு நிலையங்களுக்குள் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கலாம். தபால் மூலமும் அவர்கள் வாக்களிக்க முடியும்.
முடிவுகள் தாமதமாவதை எதிர்பார்க்கலாம் இவ்வாண்டு எத்தனை பேர் தபால் மூலம் வாக்களிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, தேர்தல் முடிவுகள் தாமதமடையலாம் என கனேடிய தேர்தல்கள் திணைக்களத்தின் தலைமை தேர்தல் அதிகாரி Perrault கூறினார்.
ஒரு பெருந்தொற்றின் போது, மாகாண தேர்தல்களில் நாம் பார்த்ததைப் போல, தபால் மூல
வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், தேர்தல் அதிகாரிகளுக்கு பெரும்பாலான
இடங்களில் அந்த வாக்குகளை எண்ணுவதற்கு அதிக நேரம் எடுக்கும்' என்று அவர் கூறினார்.இது இரண்டு நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், அளவையும் விநியோகத்தையும் பொறுத்து, சில மாவட்டங்களில் 5 நாட்கள் வரை ஆகலாம்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறு தபால் மூலம் வாக்களிப்பது?

உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வசிக்கும் கனேடியர்கள் இந்த ஆண்டு தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம். ஆனால் அதற்கு காலக்கெடுக்கள் உள்ளன. தபால் மூலம் வாக்களிக்க முடிவு செய்த பின்னர், நேரில் சென்று வாக்களிக்க முடியாது.
சட்டப்படி, தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் பின்னர் தங்கள் மனதை மாற்றிக்கொண்டு வேறு வழியில் வாக்களிக்க முடியாது என்று Perrault கூறினார். வாக்களிப்பு படிவங்களில் பிரச்சினைகள் இருக்குமாயின், படிவங்கள் கிடைக்கப்பெறாவிடின், கட்டாயம் எங்களை தொடர்புகொள்ள வேண்டும் .அவர்கள் வாக்களிப்பதை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறையை நாங்கள் கண்டுபிடிப்போம். ஆனால், வெறுமனே அவர்கள் தங்கள் விருப்பத்தை மாற்றிக்கொள்ள முடியாது,” என அவர் குறிப்பிட்டார்.வெளிநாட்டில் வசிப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம், கனடாவில்வாழும் வாக்காளர்கள் பதிவேட்டில் விண்ணப்பிக்க தேர்தல் நாளுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை (September 14) வரை விண்ணப்பிக்கலாம்.

Related posts

B2B – MR.BROWN: From Barrie to Brampton  

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை மசோதாவுக்கான Ontario முதல்வரின் ஆதரவைக் கோர ஆயிரம் டொலர் நன்கொடை வழங்கவும்! விஜய் தணிகாசலம் சார்பில் அழைப்பு

thesiyam

2021 தேர்தல்: சில குறிப்புகள் -நாடாளுமன்றத்தில் மூன்று புதிய பூர்வகுடி உறுப்பினர்கள்!

Gaya Raja

Leave a Comment