Quebecகில் காணாமல் போன 3 வயது சிறுவனை தேடும் பணிகள் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாகவும் தொடர்ந்தது.
3 வயதான Jake Côté, அவரது தந்தையான David Côtéயினால் கடத்தப்பட்டதாக Quebec காவல்துறை தெரிவிக்கின்றது.
கடத்தப்பட்ட சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள, காவல்துறையினர் சிறுவனும் அவரது தந்தையும் பயன்படுத்திய பல பொருட்களை கண்டுபிடித்ததாகக் கூறுகின்றனர்.
சிறுவனதும் தந்தையினதும் DNA தடயங்கள் பொருட்களில் காணப்பட்டதாக வெள்ளிக்கிழமை இரவு வெளியான செய்திக்குறிப்பில் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
Amber எச்சரிக்கை வழங்கப்பட்டதில் இருந்து தேடுதல் பகுதியில் இருந்து இந்தத் தடயங்களை கண்டுபிடித்ததாகவும் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
சிறுவனை கண்டுபிடிப்பதற்கான Amber எச்சரிக்கை வியாழக்கிழமை Quebec முழுவதும், New Brunswick வரையும் நீட்டிக்கப்பட்டது.
அது தொடர்ந்தும் New Brunswickகில் நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் Quebecகில் Amber எச்சரிக்கை வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் – நான்காவது இரவாக நடைமுறையில் உள்ளது.