ஒட்டாவாவில் இருந்து தெற்கே 95 km தூரத்தில் அமைந்துள்ள Ontario மாகாணத்தின் Prescott நகரில் இரண்டு சரக்கு புகையிரதங்கள் வியாழக்கிழமை காலை மோதிய சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.
சுமார் 16 புகையிரத பெட்டிகள் பல்வேறு நிலைகளில் தடம் புரண்டதாக CN நிறுவனம் வியாழக்கிழமை மாலை வெளியான அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இதனால் கிழக்கு Ontarioவில் தொழிலாளர் தின நீண்ட வார இறுதிக்கு முன்பாக சரக்கு மற்றும் பயணிகள் புகையிரத சேவையை சீர்குலைந்துள்ளது.