British Colombia மாகாணத்தின் தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை September மாதத்தின் பிற்பகுதியில் பெரும் அதிகரிப்பை எட்டலாம் என எச்சரிக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை வெளியான புதிய modelling தரவுகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை வெளியானது.
மாகாண சுகாதார அதிகாரி வைத்தியர் Bonnie Henry இந்த தரவுகளை வெளியிட்டார்.
தொற்றுகளின் பரிமாற்ற மற்றும் தடுப்பூசி விகிதங்களைப் பொறுத்து, September மாதத்தின் 27 ஆம் திகதிக்குள் தினசரி சுமார் 1,200 தொற்றுக்கள் British Colombiaவில் பதிவாகலாம் என அவர் குறிப்பிட்டார்.
British Colombiaவில் ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட அதிக தொற்றுக்களின் எண்ணிக்கை 1,293 ஆகும்.