September 11, 2026
தேசியம்
செய்திகள்

மூன்று வாரங்களில் Ontarioவில் நாளாந்த தொற்று எண்ணிக்கை 1,300வரை அதிகரிக்கலாம்!

மூன்று வாரங்களில் Ontarioவில் நாளாந்த COVID தொற்று எண்ணிக்கை 1,300வரை அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக Science Advisory குழு எச்சரிக்கிறது.

தற்போதைய விகிதத்தில் தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்தால், நாளாந்த தொற்று எண்ணிக்கை 1,300வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக, Science Advisory குழுவின் இயக்குனர், Delta மாறுபாடு காரணமாக அதிகரித்து வரும் தொற்றின் பரவல் குறித்து கவலை தெரிவித்தார்.

புதிய தொற்றுநோய்களின் தற்போதைய இரட்டிப்பு காலம் 22 நாட்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Ontarioவில் திங்கட்கிழமை மாத்திரம் 639 புதிய தொற்றுக்கள் பதிவாகின.

இதன் மூலம் நாளாந்த தொற்று எண்ணிக்கை நான்காவது நாளாக 600ஐ தாண்டியது.

June மாத ஆரம்பத்தின் பின்னர் Ontarioவில் ஞாயிற்றுக்கிழமை அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவாகின.

Related posts

சீனாவுடனான கனடாவின் உறவு ஒரு திருப்புமுனையான காலகட்டத்தில் உள்ளது: Mark Carney

Lankathas Pathmanathan

பொதுத் தேர்தலில் இம்முறை ஏழு தமிழ் வேட்பாளர்கள்!

Gaya Raja

இந்த மாத இறுதியில் Johnson & Johnson தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும்!

Gaya Raja

Leave a Comment