தேசியம்
கனேடிய தேர்தல் 2021ராகவி புவிதாஸ்

கனேடிய தேர்தல் பிரச்சாரம்: முதலாவது வாரம்!

இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளி குறைகிறது.

புதிதாக வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு, தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு வார முடிவில், Liberal கட்சிக்கும் Conservative கட்சிக்கும் இடையிலான போட்டி Conservative கட்சிக்கு ஆதரவாக மேல் நோக்கி நகர்கிறது.

சனிக்கிழமை (21) காலை வெளியிடப்பட்ட வெள்ளிக்கிழமை (20)  முடிவடைந்த சமீபத்திய கருத்துக் கணிப்பில், Conservative கட்சிக்கான ஆதரவு August 12 முதல் August 20 வரையிலான காலத்தில் 3.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கூட்டாட்சிச்  சட்டத்தின் கீழ் மிகக் குறைந்த தேர்தல் காலமான 36 நாள் பிரச்சாரம், August மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகி வாக்களிப்பு நாள் September மாதம் 20 ஆம் திகதி என திட்டமிடப்பட்டது.

Liberal கட்சி  தலைவர் Justin Trudeau தேர்தல் அறிவித்தலின் சில நாட்களுக்கு முன்னர் வரை இரட்டை இலக்க வெற்றிக்கான நிலையில் இருந்தார்.

August 12 அன்று 33.4 சதவிகிதமாக இருந்த ஆதரவு, 34.2 சதவீதமாக அதிகரித்து Liberal கட்சி இன்னும் முன்னணியில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பு காட்டுகிறது. ஆனால் Conservative கட்சியினர் ,  Liberal கட்சியின் முன்னிலைக்கு நெருக்கமாக உள்ளனர். இப்போது அவர்களுக்கான ஆதரவு 32.3 சதவிகிதமாக மாறி உள்ளது.

August 12 இல் பதிவு செய்யப்பட்ட 20.7 சதவிகித ஆதரவு தளத்தில் இருந்த NDP, அண்மைய கருத்துக் கணிப்பில் 20.2 சதவிகித வாக்கு ஆதரவுக்கு குறைந்துள்ளது. பசுமை கட்சிக்கு வாக்கு ஆதரவு 7.9 சதவீதத்தில் இருந்து 4.3 சதவீதமாக குறைந்துள்ளது. தேசிய பிரச்சாரத்தில் கவனம் செலுத்தாததால் பசுமை கட்சிக்கான ஆதரவு குறைந்து இருக்கலாம். Bloc Quebecoisசின் வாக்கு ஆதரவு 6.3 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாக குறைந்துள்ளது. 1.9 சதவீதத்திலிருந்து மக்கள் கட்சிக்கு வாக்கு ஆதரவு 2.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

விரும்பப்படும் பிரதமர் தெரிவாக Justin Trudeau இருந்தாலும், Erin O’Toole குறிப்பிடத்தக்க ஆதரவு அதிகரிப்பை  பெற்றுள்ளார்.

வெள்ளிக்கிழமை முடிவடைந்த கருத்துக்கணிப்பில், 32.2 சதவிகிதமானவர்கள் பிரதமர் தெரிவாக Trudeauவுக்கு முதலிடம் அளித்தார்கள் . August 12 அன்று Trudeauவுக்கான ஆதரவு 35.6 சதவீதமாக இருந்தது. 24.8 சதவிகிதமானவர்கள் பிரதமர் தெரிவாக O’Tooleக்கு முதலிடம் அளித்தார். August 12 அன்று O’Tooleக்கான ஆதரவு 17.7 சதவீதமாக இருந்தது. NDP தலைவர் Jagmeet Singh 17.7 சதவிகிதத்துடன் பிரதமர் தெரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

பிரச்சாரத்தின் முதல் வாரத்தில் கட்சி தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள குழப்பம், ஆப்கானிஸ்தானில் இருந்து கனேடிய இராணுவத்திற்கு உதவியவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை எதிர்கொண்டனர். சில துறைகள் கட்டாய தடுப்பூசிகளை அமுல்படுத்த வேண்டுமா என்ற விடயமும் முதல் வாரத்தில் முக்கிய கவனம் பெற்றது.

  • ராகவி புவிதாஸ்

Related posts

2021 கனேடிய தேர்தல்: சமூக ஊடகங்களின் ஆதிக்கம்!

Gaya Raja

Ontarioவில் அதிக இடங்களை Conservative கட்சி வெற்றி பெறும்: O’Toole நம்பிக்கை !

Gaya Raja

230 வாக்குகளால் 2ஆம் இடத்தில் தமிழர் – முழுமையான முடிவு புதன்கிழமை இரவு வெளியாகும்!

Gaya Raja

Leave a Comment