நடைபெறவுள்ள தேர்தலில் சில மாகாணங்கள் பாடசாலைகளில் வாக்குச்சாவடிகளை அனுமதிக்காது என தெரியவருகின்றது.
கனடா முழுவதும் COVID தொற்றின் நான்காவது அலை உருவாகியுள்ள நிலையில், சில மாகாணங்கள் தேர்தல் நாளில் பாடசாலைகளில் வாக்குச்சாவடி மையங்களை அமைக்க அனுமதிக்கும் வழக்கமான நடைமுறையை மறுபரிசீலனை செய்கின்றன.
இந்த தேர்தலில் பாடசாலைகளில் வாக்குச்சாவடிகளை அமைக்க விரும்பவில்லை என Manitoba மாகாணம் அறிவித்துள்ளது.
New Brunswick மாகாணமும் இம்முறை பாடசாலைகளில் வாக்குச்சாவடிகளை வைக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.
Newfoundland and Labradorரில் வாக்குச் சாவடிகளாக பாடசாலைகள் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நடைமுறை COVID தொற்றுக்கு நீண்ட காலத்திற்கு முன்னரே அமுலில் இருந்தது.
உள்ளூர் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் வரை, பாடசாலைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பாடசாலை அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும் என Alberta கூறுகிறது.
இது குறித்து பொது சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக British Colombiaவின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.