February 22, 2025
தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

வாக்குச்சாவடிகளில் முகமூடி விதிகள் அமுல்படுத்தப்படும்: கனேடிய தேர்தல் திணைக்களம்!

தேர்தல் வாக்களிப்பின் போது, வாக்குச்சாவடிகளில் முகமூடி விதிகள் அமுல்படுத்தப்படும் என கனேடிய தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆனால் தேர்தல் கடமையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டிய தேவையில்லை என தேர்தல் திணைக்களம் கூறுகிறது.

தேர்தல் தின நடவடிக்கைகள் குறித்து கனேடிய தலைமை தேர்தல் அதிகாரி Stephane Perrault புதன்கிழமை தகவல் வெளியிட்டார்.

அனைத்து வாக்குச்சாவடிகளும் மேம்படுத்தப்பட்ட பொது பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மிகவும் கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து பரவலாக ஆலோசனை நடத்தியதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்

தனக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளில் கட்டாய தடுப்பூசி சேர்க்கப்படவில்லை எனவும் அவை வாக்காளர்களுக்கு, தொழிலாளர்களுக்கு வேட்பாளர் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் கூறினார்

இந்த விடயத்தில் தொடர்ந்தும் ஆலோசனை பெறுவதாகவும் Perrault கூறினார்.

மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக முகமூடி அணிய மறுக்கும் கனேடியர்கள் நேரில் வாக்களிக்க தடை விதிக்கப்படலாம் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

முகமூடி அணிய மறுப்பவர்களை அஞ்சல் மூலம் வாக்களிக்க அவர் ஊக்குவிக்கிறார்.

அடுத்த மூன்று வாரங்களில், சுமார் 18 மில்லியன் கனேடியர்களுக்கு சேவை செய்வதற்காக 25,000 கனேடியர்களை வாக்குச் சாவடி அதிகாரிகள் பணியில் அமர்த்துவார்கள்.

Related posts

பிரதமரை அச்சுறுத்திய குற்றத்தை ஒருவர் ஒப்புக் கொண்டார்!

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலில் நாற்பதுக்கும் அதிகமான வேட்பாளர்கள்?

Lankathas Pathmanathan

அமெரிக்க வரிகளுக்கு எதிரான பதிலடி திட்டத்தை திங்கட்கிழமை வெளியிட கனடிய அரசாங்கம் தயார்?

Lankathas Pathmanathan

Leave a Comment