Ontarioவில் இரண்டு மாதங்களில் முதல் முறையாக 500க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
June மாத நடுப்பகுதியின் பின்னர் வியாழக்கிழமை முதல் முறையாக 500க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
வியாழக்கிழமை மொத்தம் 513 புதிய தொற்றுக்கள் பதிவாகின. வியாழகிழமை அறிவிக்கப்பட்ட 513 தொற்றுகளில் 360 பேர் தடுப்பூசி போடப்படாதவர்கள் எனவும் 56 பேர் ஒரு தடுப்பூசியை போட்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சர் Christine Elliott கூறினார்.
இந்த நிலையில் ஏழு நாள் தொற்றுக்களின் சராசரி Ontarioவில் 375ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வாரம் 214ஆக இருந்தது
வியாழக்கிழமை Ontarioவில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.இலையுதிர் காலத்தில் தொற்றுகள் அதிகரிக்கும் என இந்த வார ஆரம்பத்தில் Ontarioவின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.