தேர்தல் நடவடிக்கைகளுக்கு COVID தொற்று தடையாக இருக்காது என கனேடிய தேர்தல் திணைக்களம் உறுதியளித்துள்ளது.
மத்திய அரசு தொற்றை மையமாகக் கொண்ட தேர்தல் சட்ட மாற்றங்களை கொண்ட C -19 சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என கனடாவின் தலைமைத் தேர்தல் அதிகாரி கூறினார்.
ஆனாலும் தொற்று காலத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணுவது குறித்த கேள்விகள் தோன்றியுள்ளன.
கடந்த பொது தேர்தலில், பதிவான 18.3 மில்லியன் வாக்குகளில் சுமார் 55,000 வாக்குகள் தபால் மூலம் பதிவாகின.
தொற்றின் போது, இந்த எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கனேடியர்களில் 37 சதவீதம் பேர் தபால் மூலம் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதாக புதிய கருத்து கணிப்பொன்று தெரிவிக்கின்றது.
இதனால் பல மில்லியன் தபால் வாக்குகளை எண்ண வேண்டிய நிலை தேர்தல் திணைக்களத்திக்கு தோன்றும் சாத்தியக்கூறு உள்ளது.
அதேவேளை தபால் மூல வாக்குகள் ஒரு கட்சியைவிட மற்றுமொரு கட்சிக்கு அதிகம் பயனளிக்கும் நிலை உள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் கூறப்படுகின்றது.