கனடாவில் Fentanyl, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு COVID தொற்று காலத்தில் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று சுட்டிக் காட்டுகிறது.
தொற்றின் ஆரம்பத்தின் போது கனடாவின் நகரங்களில் Fentanyl, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
போதைப்பொருள் நுகர்வுக்கான இந்த அதிகரிப்பு கடந்த ஆண்டு அதிகப்படியான அளவு போதை தொடர்பான இறப்புகளின் அதிகரிப்புக்கு வலுவான பங்களிப்பு காரணியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
2020ஆம் ஆண்டின் April முதல் September வரை போதைப் பொருள் தொடர்பான இறப்புகள் மிக உயர்ந்ததாக இருந்ததை முந்தைய தரவுகள் சுட்டிக்காட்டின.