தேசியம்
செய்திகள்

இரண்டு வருடங்களின் பின்னர் கனடாவில் Blue Jays!!

Toronto Blue Jays baseball அணி சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் வெள்ளிக்கிழமை கனடாவில் ஒரு தொடரை ஆடவுள்ளது.

Blue Jays அணி கனடா திரும்புவதைக் குறிக்கும் வகையில் நயாகரா நீர்வீழ்ச்சி, C.N. கோபுரம் உள்ளிட்ட கனடா முழுவதும் உள்ள அடையாளங்கள் வியாழன் இரவு நீல மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளியூட்டப்பட்டன.

தவிரவும் கனடா முழுவதும் உள்ள நகரங்கள் பலவும் Blue Jays அணியின் வருகையை கொண்டாடுகின்றன.

வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் தொடர், Torontoவில் அமைந்துள்ள Rogers மைதானத்தில் நடைபெறுகின்றது.

COVID தொற்றின் விளைவாக நடைமுறையில் உள்ள எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக, Blue Jays அணி 2020 மற்றும் 2021 ஆண்டு ஆட்டங்களை Buffaloவில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Related posts

Patrick Brown மீதான குற்றச்சாட்டுகளை தீர்ப்பதற்கு அனைத்து வாய்ப்பும் வழங்கப்பட்டது: Conservative கட்சி

Ontario பாடசாலை வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசிக்கு தடை

Lankathas Pathmanathan

பொருளாதார முன்னேற்றத்தில் தடை?

Lankathas Pathmanathan

Leave a Comment